Developed by - Tamilosai
மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகின்ற நிலையில் வடக்கில் பல இடங்களில் அதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் வார நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக் கோரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின், சில காவல்துறை நிலையங்கள் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேருக்கு, மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்குக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதேவேளை, கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண காவல்துறை அதிகார பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னதாக, முல்லைத்தீவு, முள்ளியவளை, மற்றும் வவுனியா காவல்துறை பிரிவுகளிலும், சிலருக்கு மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.