Developed by - Tamilosai
மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் காவல்துறையினரால் 13 பேருக்கு எதிராக தடை விதிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.
வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ. ஜூட்சன், மாவீரர் நாளை அனுஷ்டிக்கத் தடைவிதிக்கும் கோரிக்கையை நிராகரித்தார்.
அதேநேரம், யாரும் சட்டங்களை மீறிச் செயற்பட்டால் அவர்களைக் கைது செய்ய முடியும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.