தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாவீரர் நாளுக்குத் பொலிஸார் தடை? ஊர்காவற்துறை நீதிமன்றம்

0 283

மாவீரர் தினத்துக்கு தடை உத்தரவு வழங்குமாறு கோரி ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பொலிஸார் இணைந்து ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

அறுவருக்கு மாவீரர் நினைவேந்துலுக்கு தடை விதிக்க கோரி இரண்டு பொலிஸ் நிலையங்களினால் மல்லாகம் நீதிமன்றுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கினை விசாரித்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான், குறித்த நிகழ்வு நடைபெறும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து வழக்கினை தள்ளுபடி செய்வதாக உத்தரவிடாடிருந்தார்.

அத்துடன் அவர்கள் இலங்கையின் சட்டத்திட்டங்களை மீறுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
குறித்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ், சட்டத்தரணி ராகினி நடராசா சட்டத்தரணி வெலீனா, சட்டத்தரணி நிரோசன் மற்றும் சட்டத்தரணி சுதர்சினி ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.