Developed by - Tamilosai
சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இன்று நவம்பர் 27ஆம் திகதி மாவீரர்களின் தினத்தை முன்னிட்டு மாவீரா்களுக்கு தமது அஞ்சலியை செலுத்துவதாக சிறீதரன் நாடாளுமன்றில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபா வரையில் வேதனம் உயர்த்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை துட்டகைமுனு மன்னன் தாம் போரில் வெற்றிக்கொண்ட எல்லாளனுக்கு மரியாதை செலுத்தக்கூறிய இந்த நாட்டில், போரில் இறந்த மாவீரர்களின் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.