தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாவட்ட அரசாங்க அதிபருக்கு பதவி உயர்வு-திருகோணமலை

0 406

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் தர்சன பாண்டிகோராள அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கரும்பு, சோளம்,மரமுந்திரிகை, மிளகாய், கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு போக பயிர்ச்செய்கை அபிவிருத்தி,அதனோடு இணைந்த கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளாராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடமிருந்து தமக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை இவர் தம் கடமைகளை உத்தியோகபூர்வமாக இராஜாங்க அமைச்சில் பொறுப்பேற்கவுள்ளார்.

கடந்த 2020.10.26 ம் திகதி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்றதுடன் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களின் பல்வேறு தேவைகளை விசேட கவனம் செலுத்தி செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.