தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாமியாரின் கழுத்தை நெரித்து கொன்ற மருமகன் – நடந்தது என்ன ?

0 64

கொழும்பு, வத்தளை – மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது ஒரே மகளின் கணவர் என மஹாபாகே பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 7ஆம் திகதி அதிகாலை 1.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, சொத்துக்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான தடையை நீக்கும் நோக்கில் மாமியாரை கொலை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

40 கோடி ரூபாவுக்கான நிலையான வைப்பு சான்றிதழ், காணி உறுதி பத்திரங்கள், உயிரிழந்த பெண்ணின் தங்க நகை, பணம் உட்பட ஆவணங்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ராகம பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது சந்தேக நபர் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மஹரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.