தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவம் இன்று ஆரம்பம்..

0 187

வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகோற்சவ நிகழ்வுகள் இன்று (26) காலை 11 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது,

27ஆம் திகதி வியாழக்கிழமை 07.30 மணிக்கு இடம்பெறும் உள்வீதி கொடி ஊர்வலத்தைத் தொடர்ந்து 11 மணி அளவில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறும் அதனைத் தொடர்ந்து தினமும் விசேட பூஜைகளுடன் முற்பகல் 11 மணிக்கும் 6 மணிக்கும் சுவாமிகள் உள்வீதி, வெளிவீதி உலா இடம்பெறுவதுடன் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி காலை 8 மணிக்கு இரதோற்சவம் இடம்பெறும்.

இம்முறை கொரோனா தொற்று காரணமாக தேவஸ்தானத்திற்கு வருகைதரும் அடியார்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் வழமைபோல் இடம்பெறும் அன்னதான நிகழ்வும் இம்முறை இடம்பெறாது.

பஞ்சரத பவனி நகர் வலம் வருவது குறித்து நாட்டின் சூழ்நிலைக்கேற்ப தீர்மானம் எடுக்கப்படுமென ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.