Developed by - Tamilosai
தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளிலும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
தற்போது பெய்து வரும் மழையினால் மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.