தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்

0 70

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்குத் தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டுப் பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. 

மாதகல் ஜே / 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் , அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தன.

காணிகளை அளவீடு செய்வதற்காக  நிலஅளவை  திணைக்கள  உத்தியோகத்தர்கள் வருகை தந்தபோது, காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். 

Leave A Reply

Your email address will not be published.