Developed by - Tamilosai
ஆனமடுவ கொட்டுக்கச்சி வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் 18 பிக்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவ பிக்குகளுக்கே இவ்வாறு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.
சுமார் 65 மாணவ பிக்குகள் தங்கியிருந்து கல்வி பயிலும் வடத்த ஸ்ரீ சரணங்கர பிரிவெனாவில், 10 சிறுவர்களும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான 18 மாணவ பிக்குகளுக்கும் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன தெரிவித்துள்ளார்.