Developed by - Tamilosai
அனுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்குள் இராணுவ வீரர் ஒருவர் 15 வயது மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு வந்திருந்தமையை அடுத்தது குறித்த இராணுவ வீரர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24 வயதான இராணுவ வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் சந்தேக நபர் தன்னை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியதாக மாணவி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை நடத்திய பொலிஸார் சந்தேக நபரான இராணுவ வீரரை கைது செய்துள்ளனர்.