Developed by - Tamilosai
அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணாமல் பாடசாலைகளை எதிர்வரும் 7 ஆம் திகதி திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ள நிலையிலேயே அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை பல பாடசாலை பேருந்துகள், வான்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல கவலைகள் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.