Developed by - Tamilosai
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பேருந்து சேவைகள் குறைக்கப்பட்டு பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதன் காரணமாக மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனை தெரியவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, பேருந்து சேவைகள் திறம்பட செயல்படவில்லை, மேலும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்களின் பாடசாலை வருகை வெகுவாக குறைந்துள்ளது, வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை மட்டுமே மாணவர்கள் பாடசாலை வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.