Developed by - Tamilosai
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோமா அல்லது கூட்டணியாகப் போட்டியிடுவோமா என்பதை எதிர்வரும் காலங்களில் அறிவிப்போம். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் ஏழ்மை உருவாகியுள்ளது. இப்பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.