தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாகாண சபைத் தேர்தல் அரசாங்கத்திற்குப் பாதகமாக அமையும்: தேரர் எச்சரிக்கை

0 98

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். ஒரு வேளை தேர்தல் இடம்பெற்றால் தேர்தலின் பெறுபேறு அரசாங்கத்திற்குப் பாதகமாக அமையும் என தேசிய வளங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும், அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.

அந்தளவிற்கு மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளனர். அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையிலான மாகாண சபைத் தேர்தலுக்கு ஒதுக்கும் நிதியை நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கு செலவழித்தால் நிலையான பயன்கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக மாகாண சபைத் தேர்தல் முறைமையை முழுமையாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதியிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்.

மாகாண சபைத் தேர்தல் அவசியமா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் முதலில் மக்களின் அபிப்ராயத்தைக் கோர வேண்டும் எனவும் தேரர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.