Developed by - Tamilosai
நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்குவதற்கு கொரோனா தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை கல்வி, சுகாதார மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முன்னிலைப் பணியாளர்களுக்கு மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.