Developed by - Tamilosai
கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்த வீரர்களுக்கான ஐ.சி.சி. ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன இடம்பிடித்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்தப் பட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
இதன்படி ஐ.சி.சி. ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மஹேல ஜயவர்த்தன பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பங்காற்றிய சிறந்த வீரர்களுக்கு ஐ.சி.சி. ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கிக் கௌரவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.