தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மஹிந்த ராஜபக்ச விடுத்த சவாலை ஏற்கின்றோம்-ஐக்கிய மக்கள் சக்தி

0 233

தேர்தல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த சவாலை நாம் ஏற்கின்றோம். எனவே, உள்ளாட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான எஸ்.எம். மரிக்கார் இந்த அறிவிப்பை விடுத்தார்.

” அச்சம் காரணமாகவே அரசு தேர்தலை ஒத்திவைத்துள்ளது. எனவே, பிரதமரின் சவாலை நாம் ஏற்கின்றோம். தேர்தலை நடத்துமாறு அவருக்கு சவாலும் விடுக்கின்றோம். நாமும் அடுத்த மாதம் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளோம்.” – என்றும் மரிக்கார் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.