Developed by - Tamilosai
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து கலந்துரையாட தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்வரும் வாரத்தில் கூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தடுப்பாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்தானந்த உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.