தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி-ஜனாதிபதி

0 461

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி வருமாறு,

பல்லாயிரம் காலந்தொட்டே, இந்துக்கள் சிவபெருமானை வழிபட்டு, இந்தத் தெய்வீகப் பிரார்த்தனையில் ஈடுபட்டு சிவனருள் பெற்று வருகின்றனர்.

மனித உயிர்களுக்குள்ளும் இவ்வுலகத்திலும் உள்ள இருள் மற்றும் அஞ்ஞானம் நீங்கி, ஞான ஒளியைச் சரணடையும் நோக்கில், இந்தச் சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அத்துடன், ஒற்றுமை மற்றும் முக்திப் பேறு போன்றனவும் இந்நன்னாளில் கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை. அனைவரையும் துன்பத்திலிருந்து விடுவிப்பதே, மனித குலத்தைத் தாண்டிய தெய்வீகப் பிரார்த்தனையாக உள்ளது.

சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, சிவராத்திரி தினத்தன்று பெற்றுக்கொள்ளப்படும் ஆன்மீக பலம், ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொண்டுவரும் சவால்களை வெல்வதற்குக் கிடைக்கும் ஆசீர்வாதமாகவே நாம் பார்க்கிறோம்.சிவனுக்கு உகந்த நன்னாள் எடுத்துரைக்கும் நம்பிக்கை, உலக வாழ் மக்கள் அனைவரும் புத்தெழுச்சி பெறுவதற்கான உற்சாகத்தை ஏற்படுத்துவதோடு, உண்மைத்தன்மை, தியாக மனப்பான்மை மற்றும் மன்னிப்பு வழங்கல் போன்ற உண்மைக் குணங்களுடன் வாழ்வதற்கான வழியமைக்கப்படுகிறது.

மஹா சிவராத்திரி தின ஆன்மீகச் செய்தியானது, ஒவ்வொருவரிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும். ஆன்மீகச் சிந்தனை, உத்வேகம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் சிவனிரவு, அனைவரதும் நோக்கங்களை அடைய வழிவகுக்கும் நன்னாளாக அமைய பிரார்த்திக்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.