Developed by - Tamilosai
உலகளாவிய ரீதியில் பேரிடரினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் நீங்கி, அனைவரும் சுபீட்சமானதொரு வாழ்வு வாழ வேண்டி, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் – விஷேட பூஜை வழிபாடும் ஆசியுரையும் வேதபாராயணமும் ஆகிய பொது நலன் கருதிய பிரார்த்தனை நிகழ்வுகள் கடந்த ஒரு வருட காலமாக இடம்பெற்று வருகின்றன.
இன்று வியாழக்கிழமை இப் பிரார்த்தனை வழிபாடுகளின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்ட விஷேட நிகழ்வாக மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் யாழ்ப்பாணம், சுன்னாகம், மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது .
ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ நா. சிவசங்கரக்குருக்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கிரியைகளைப் பிரதம சிவாச்சாரியாரோடு இணைந்து பிரம்மஸ்ரீ நா.சிவசுந்தரசர்மா மற்றும் பிரம்மஸ்ரீ நா.சிவமனோகரசர்மா ஆகியோர் ஆற்றினர்.