தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மயிலணியில் விசேட பூஜை வழிபாடு

0 146

உலகளாவிய ரீதியில் பேரிடரினை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கொவிட் – 19 தாக்கம் நீங்கி, அனைவரும் சுபீட்சமானதொரு வாழ்வு வாழ வேண்டி, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் – விசேட  பூஜை வழிபாடு  – ஆசியுரையும் வேதபாராயணமும் ஆகிய பொது நலன் கருதிய பிரார்த்தனை நிகழ்வுகள் கடந்த ஒரு வருட காலமாக இடம்பெற்று வருகின்றன. 

இந்நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமை   இப் பிரார்த்தனை வழிபாடுகளின் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு விசேட நிகழ்வாக  மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் சுன்னாகம் – மயிலணி திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் (வடலியம்மன்) திருக்கோவிலில் காலை 6.30 மணிக்கு  இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின்  பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ நா. சிவசங்கரக்குருக்கள் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இக் கிரியைகளைப் பிரதம சிவாச்சாரியாரோடு இணைந்து பிரம்மஸ்ரீ நா.சிவசுந்தரசர்மா மற்றும் பிரம்மஸ்ரீ  நா.சிவமனோகரசர்மா ஆகியோர்  ஆற்றவுள்ளனர்.

இந்நிகழ்வு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு, இலங்கை வானொலி தென்றல் அலைவரிசையில் நேரடி ஒலிபரப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.