Developed by - Tamilosai
மஸ்கெலியா எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மண்ணெண்ணெய் வழங்குமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று கிழமையாக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினமும் மண்ணெண்ணெய் வரவில்லை என எரிபொருள் நிலைய ஊழியர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சுமார் 500 பேர் வரையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக மஸ்கெலியா – ஹட்டன், மஸ்கெலியா – நல்லதண்ணி போன்ற வீதிகளில், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.