Developed by - Tamilosai
மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 60 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
தனது வீட்டிக்கு அருகிலிருந்த வர்த்தக நிலையத்துக்கு சென்று திரும்பியபோது, மரமொன்றிலிருந்த குளவிக்கூட்டிலிருந்து கலைந்த குளவிகள் அவரை தாக்கியுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட குறித்த நபர், வட்டவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொத்ஸ்சைல்ட் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
பணி முடிந்து வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான பெண் ஒருவர் சிகிச்சைகளுக்காக புஸ்ஸலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.