Developed by - Tamilosai
ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டிற்கான உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று ஹற்றனில் இடம்பெற்றது.
தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதிபர் – ஆசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தால் இன்று (09) பிற்பகல் 03 மணியளவில் ஹற்றன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணிக்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹற்றன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ்தரிப்பிடம் வரை வந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர் – ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலக் கோரிக்கையான அதிபர் – ஆசிரியர்களின் கொடுப்பனவை வழங்கக்கோரியும் கல்வித்துறையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுத்தரக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பியதுடன் பதாகைகள் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.