தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மலேசியாவின் பத்துமலை ஆலயத் தைப்பூசத் திருவிழா… கட்டுப்பாடுகளுடன்

0 138

மலேசியாவில் உள்ள பத்துமலைக் கோவிலில் வரலாற்றில் முதன்முறையாகக் காவடி இல்லாமல் தைப்பூசத் திருவிழா இடம்பெறுகிறது. 

ஆலயத்துக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையிலிருந்து இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடன்களைச் செலுத்தியுள்ளனர். 

பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஆலயத்தை வலம் வந்தனர்.

கிருமித்தொற்றுக் காரணமாக 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆலயத்தினுள் நுழைய அனுமதி இல்லை. 

ஆலயத்திற்குள் செல்வதற்குமுன் அனைவரும் தொடர்புத் தடம் கண்டறியும் செயலியில் தங்கள் வருகையைப் பதிவு செய்யவேண்டும். 

அதன்பிறகுதான் அவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். ஆலயத்தைச் சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள், பொதுச் சேவை ஊழியர்கள், ராணுவ வீரர்கள் எனப் பலரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினரும் சுமுகமான ஏற்பாடுகளை உறுதிசெய்கின்றனர். பொதுமக்களுக்குப் பாதுகாப்புக் குறித்த நினைவூட்டல்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. 

Leave A Reply

Your email address will not be published.