தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 125 மில்லியன் ரூபா அவசர நிதி உதவி

0 449

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு தொகை நிதியை அவசர உதவியாக வழங்க இத்தாலி முன்வந்துள்ளது.

இதற்கமைவாக இலங்கைக்கு 125 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக, கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின், இத்தாலிய இருதரப்பு அவசர நிதியம் மூலம், இந்த நிதி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள இத்தாலி தூதரகம வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விநியோக வலைப்பின்னல் முகாமைத்துவ செயல்முறையின் கீழ், சுகாதார அமைச்சினால் பெறுகை நடைமுறைக்கு ஏற்ப வெளிநாடுகளில் உள்ள விநியோக பிரிவின் ஊடாக நேரடியாக பணம் செலுத்த அனுமதிக்கப்படும் என்று இத்தாலிய தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.