Developed by - Tamilosai
மருந்துகளின் விலை உயர்வால், புற்றுநோயாளிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் உள்ள சம்புத்தத்வ ஜயந்தி மன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சிரேஷ்ட பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன இதனைத் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக போதிய வசதிகள் இன்மையால் சிகிச்சை சேவைகளை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள சுகாதார அமைப்பில் வைத்தியர்களுக்கு சிறந்த சேவை கிடைக்கவில்லை எனவும் சிரேஷ்ட பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.