தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மருந்துகளின் விலையை அதிகரிக்குக

0 202

மருந்துகளின் விலையை 15 வீதத்தால் அதிகரிக்குமாறு மருந்து இறக்குமதியாளர்களின் கைத்தொழில் சபை சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மருந்து இறக்குமதிக்கான கடன் கடிதங்களைத் திறக்க டொலர்களை விடுவிக்க முடியாவிட்டால் கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 2021 இல், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை மற்றும் மருந்து வழங்கல் மற்றும் உற்பத்தி இராஜாங்க அமைச்சு மருந்துகளின் விலையை ஒன்பது சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளன.

இந்நிலையில்,தற்போது அமெரிக்க டொலர் 176 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 230 ரூபாவை தாண்டியுள்ளதாக மருந்து இறக்குமதியாளர்கள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை,மூலப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் பரசிட்டமோல் மாத்திரைகளின் உற்பத்தியும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.