Developed by - Tamilosai
நேற்று மாலை (14) தலவாக்கலை பகுதியில் மரம் வீழ்ந்து உயிரிழந்தவரின் சடலம் தற்போது நுவரெலியா பொது வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை கிறேஸ்வெஸ்டன் ஸ்கல்பா பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கதக்க நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் மீது வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின் கிளை வீழ்ந்த நிலையிலே நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.