தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மரம் முறிந்து விழுந்து விபத்து

0 89

காலி உடுகம பிரதான வீதியில் கொட்டவ என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

150 அடி உயரமான பழைய மரம் ஒன்று மற்றுமொரு மரத்தின் மீது சரிந்து விழுந்துள்ளது. இதனால், மற்றைய மரத்தின் பெரிய கிளை முறிந்து வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது விழுந்துள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிந்தும பிரதேசத்தில் வசித்து வரும் குடும்பத்தை சேர்ந்த 58 வயதான தந்தை, 56 வயதான தாய் மற்றும் 30, 26 வயதான இரண்டு மகன்களே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

தாயும் ஒரு மகனும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.