Developed by - Tamilosai
கம்பளை – தொழுவ ஊடாக கலஹா செல்லும் பிரதான வீதியில், குருகலை எனும் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து பல மணிநேரம் தடைப்பட்டது.
சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்திலும் மாலை வேளைகளில் கடும் மழைபெய்து வருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி பகுதியில் நேற்றிரவு பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே பிரதேச மக்களின் உதவியுடன் மரம் அப்புறப்படுத்தப்பட்டது.
நேற்றிரவு முதல் இன்று முற்பகல் வரை அவ்வழி ஊடான போக்குவரத்து தடைப்பட்டியிருந்தது. இதனால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.