Developed by - Tamilosai
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறிகளின் மொத்த விலை கடந்த வாரம் பாரியளவில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியில் காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகள் மத்திய நிலையத்திற்கு வருகை தராமையே காய்கறி விலை வீழ்ச்சி மற்றும் விற்பனையின்மைக்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
கடந்த வாரம் 300 ரூபாவை அண்மித்த ஒரு கிலோ போஞ்சியின் விலை நேற்று 100 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாவாகவும், கரட் 110 கிலோவாகவும், சிவப்பு உருளைக்கிழங்கு 100 ரூபாவாகவும் குறைந்துள்ளது. மற்றும் வெண்டைக்காய் கிலோ 80 ரூபாய் என பொருளாதார மைய விவசாயிகள் தெரிவித்தனர்