Developed by - Tamilosai
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணத்தினால் அடுத்த மாத இறுதிக்குள் நாட்டில் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என மரக்கறி வியாபாரிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொருளாதார மையங்களுக்கும் நேற்று குறைந்தளவு மரக்கறி கிடைத்துள்ளது. இதன் காரணமாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் பாரிய சிரமங்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.