Developed by - Tamilosai
விவசாயிகளுக்கு தேவையான எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தால் மீண்டும் மரக்கறிகளின் விலை பலமடங்காக அதிகரிக்கும் என அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் ஒருங்கிணைப்பாளர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் ஒருங்கிணைப்பாளர் அருண சாந்த ஹெட்டியாராச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வருவதற்கு மோட்டார்கள் பயன்படுத்தப்படுவதால் டீசலுக்கு மோட்டார்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.