தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மம்மூட்டி, ஜோதிகாவின் ‘காதல் தி கோர்’ படத்தின் ட்ரெய்லர்

0 114

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்தை இயக்குநர் ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள புதிய படம் ‘காதல் தி கோர்’.

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான மம்மூட்டியுடன் ஜோதிகா முதன்முறையாக திரையில் இணையும் திரைப்படம் காதல் தி கோர். இப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் ஜோதிகா 14 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ – எண்ட்ரி தருகிறார். இந்தப் படத்தை மம்முட்டியின் மம்முட்டி கம்பெனி மற்றும் வேஃபேரர் ஃபிலிம் இணைந்து தயாரிக்கின்றனர்.

காதலை மையப்படுத்திய குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில் யூடியூபில் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது

Leave A Reply

Your email address will not be published.