தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மன்னாரில் சிக்கிய ஆபத்து – அதிரடிப்படையினர், பொலிஸார் களத்தில்

0 537

மன்னார் இராணுவ முகாமிற்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில்  மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுக்கிய நிலையில் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த மர்மப்பொருள் இன்று சனிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மப்பொருள் தொடர்பாக அப்பகுதி கடற்படையினர் மன்னார் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் உடனடியாக அப்பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.

குறித்த மர்ம பொருளானது பல்வேறு மின் சுற்றுக்களுடன் காணப்பட்ட நிலையில் அதிரடிப்படையினர் குறித்த மர்மப்பொதியை மீட்டு சோதனை செய்தனர்

எனினும் குறித்த மர்மப்பொதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எவ்வித பொருட்களும் இல்லை என தெரியவந்துள்ளதுடன் குறித்த மர்ம பொருள் தொடர்பக மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.