தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மன்னாரில் இளம் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது

0 76

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையிலுள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம்  இன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்குச் சென்ற நிலையிலேயே பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை அவதானித்து மன்னார் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் பாலப்பகுதியில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்த நிலையில் அவரைத் தேடும் பணி இடம்பெற்ற போதும் குறித்த பெண் கிடைக்காத நிலையில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய சடலம் அப் பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகின்றது.

இருப்பினும் குறித்த இளம் பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.