Developed by - Tamilosai
மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரை 273 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இவ்வருடம் மாத்திரம் 2376 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ரி.வினோதன் இன்று விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 15 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 23 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 2,376 கொரோனாத் தொற்றாளர்களும் மாவட்டத்தில் மொத்தமாக 2,393 கொரோனாத் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 431 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.