Developed by - Tamilosai
கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள மகிழடித்தீவு – காளிகோவில் வீதியில் இளம் குடும்பமான கணவன் – மனைவி இடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
நேற்று தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
20 வயதுடைய ஒரு பிள்ளையின் தயாரான சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது இரண்டரை வயதுக் குழந்தையைத் தனது சகோதரியின் வீட்டுக்குக் கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் நண்பகல் 12 மணியளவில் சரணடைந்துள்ளார்.
குறித்த நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.