Developed by - Tamilosai
குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கத்தியால் குத்திய கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ். வலி. வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்று (25) மாலை கணவன் – மனைவிக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதன்போது 22 வயது தனது மனைவியைக் கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவன் வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.
கத்திக்குத்து காயத்திற்குள்ளான பெண்ணின் அவலக் குரல் கேட்டு வந்த அயலவர்கள் அவரை மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தலைமறைவாகியுள்ள நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.