Developed by - Tamilosai
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஒரு மர்ம உயிரினம் சிக்கியுள்ளது.
இதையடுத்து டெக்ஸாசின் அமரில்லோ நகரத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், கேமராவில் பதிவான இந்த உயிரினத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.
மே 21 அதிகாலை 1:25 மணியளவில் அமரில்லோ மிருகக்காட்சி சாலையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் இந்த உயரினத்தின் படம் பதிவாகியுள்ளதாக அந்த பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரினம் பதிவாகியுள்ள இடத்தில் எந்த விதமான அழிவோ அல்லது குற்றச் செயலோ நடந்ததற்கான அறிகுறிகள் காணப்படவில்லையாம்.
அதேபோல் மிருகக்காட்சிசாலையில் உள்ள எந்த விலங்குகளும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள் இது இருட்டில் பதுங்கியிருக்கும் வேற்றுகிரகவாசி என பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் வேறு ஏதாவது விலங்காக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது மனித ஆபத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.