Developed by - Tamilosai
உள்ளி, சீனி, தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களுடனான மோசடியை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை மூடிமறைக்கிறது.
கோட்டாபய ஆட்சிக்கு வந்து மூன்று மாத காலத்திற்குள் பிணைமுறி மோசடியாளர்களைத் தண்டிப்பதாக குறிப்பிட்ட அரசாங்கம் இரண்டாண்டுகள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தால் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உர இறக்குமதியில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த உர இறக்குமதிக்கான நிதி மத்திய வங்கியின் திறைச்சேரி ஊடாக வழங்கப்பட வேண்டும். ஆனால், நிதி ஒரு தனியார் வங்கி வைப்பின் ஊடாகச் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.