தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மத்திய வங்கி ஆளுநர் யாழில் பிரச்சனைகளை கேட்டார்.

0 167

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

வட பிராந்தியத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சிக்கல்களை கையாள்வதற்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் உத்திகள் வழங்குவதை  நோக்காக கொண்டு இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்,இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்கள்,வங்கிகளின் பிராந்திய பொது முகாமையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.

இதன்போது முதலீட்டாளர்களின்  பிரச்சினைகளைக் நேரடியாக கேட்டறிந்து கொண்ட மத்திய வங்கி ஆளுநர் அதற்கான தீர்வுகளை வட மாகாண ஆளுநர், அரச அதிபர்கள் மற்றும்  மற்றும் வங்கி அதிகாரிகளுடன் பேசி அதற்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.