தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது

0 442

மதுரங்குளிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதி தடைப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதியை மறித்து எரிபொருள் கோரி கும்பல் ஒன்று இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதனை அண்மித்த பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரங்குளிய பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.