Developed by - Tamilosai
பணியின்போது மதுபோதையில் காணப்பட்ட கொடிகாமம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் அலுவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் நேற்ற நண்பகல் கொடிகாமம் பகுதியில் கடமையில் ஈடுபட்டனர். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தமை தொியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இருவருடமும் சாவகச்சோி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குற்றம் உறுதியான நிலையில் குறித்த இருவரும் மறு அறிவித்தல்வரை பணி நீக்கம செய்யப்பட்டதாக தொியவருகின்றது.
