தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மட்டக்களப்பு வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சீல்!

0 102

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொதுச் சுகாதார பரிசோதகர்களால் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டது.

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலையில் நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பல்லியொன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

இது தொடர்பில் திங்கட்கிழமை போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த சிற்றுண்டிச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதிபதி குறித்த சிற்றுண்டிச்சாலையை தற்காலிமாக மூடுவதற்கான உத்தரவை விடுத்தார்.

அதனைத்தொடர்ந்து புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரசிறியின் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் சிற்றுண்டிச்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.