தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 10 பேரும் பிணையில் விடுவிப்பு!

0 179

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கல்குடா காவல்துறையினரால் கடந்த மார்கழி 27ம் திகதி இரு பெண்கள் உட்பட்ட 10பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில் சட்டத்தரணி சுகாஸ் முன்னிலையாகி விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையிலேயே 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.