Developed by - Tamilosai
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொனாகொல்ல, ஜௌசிறிபுர, உள்ளிட்ட அப்பகுதியில் அமைந்துள் கிராமங்களுக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களை துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கிராமங்களுக்குள் புகுந்து மா, பலா, வாழை, அன்னாசி, கரும்பு, உள்ளிட்ட பயன் தரும் பல மரங்களை இவ்வாறு உடைத்து சரித்து விட்டுச் சென்றுள்ளதாகவும், இதனால் தாம் பரம்பரை பரம்பரையாகச் செய்து வந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் மிக நீண்டகாலமாக இவ்வாறு காட்டு யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகின்றன.