Developed by - Tamilosai
இலங்கையில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் நிலவுவதால் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.
நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிடின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.